நிறுவுநர் நோக்கம் ஓர் ஆய்வு

திருமதி மகேஸ்வரி இரத்தினசபாபதி,
நிறுவுநர் வழி

ஆங்கிலக் கல்வியின் தேவையை உணர்ந்து உருவாக்கியதே விக்ரோறியாக் கல்லூரி.

நகரப்புறங்களில் வசித்தவர்களும், பணவசதி படைத்தவர்களும் அக்காலத்தில் ஆங்கிலக்கல்வி கற்றார்கள்.

சுழிபுரம் ஒரு கிராமம். கூடுதலாக வசதிகுறைந்த மக்களை உள்ளடக்கிய பிரதேசம்.

இவர்களிடம் திறமை இருந்தும் ஆங்கிலக்கல்வியைக் கற்கமுடியாத சூழ்நிலை நில இதை உணர்ந்தே எனது கணவரின் பேரனார் நிறுவுநர் விக்ரோறியாக் வியது. கல்லூரியை ஆரம்பித்தார்.

இதன் பேறாக அவருடைய நோக்கம் மிகவும் பூரண வெற்றி அளித்து, இன்று உலகம் முழுவதும் திறமையான சேவையாளர்களாக விக்ரோறியாவின் பழைய மாணவர்கள் விளங்குகின்றனர்.

இக்கல்லூரியில் அன்று படித்த மாணவர்கள் அதிபராய் இருந்த வில்லோபி சிமோல் அவர்களின் கையொப்பமிட்ட தராதரப் பத்திரத்துடன் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடு களில் தொழில்புரிந்து வந்தமை நாம் அறிந்த உண்மை. எனது கணவர் (C.R மாஸ்டர்) இக் கல்லூரியில் மாணவனாக இருந்து ஆசிரியராகக் கடமை ஆற்றும் பொழுது அக்குடும்பத்தில் நான் இணைந்து கொண்டேன்.

கல்லூரியை வளர்த்தெடுப்பதில் அவர்களிற்கு ஏற்பட்ட பல சிரமங்களை நான் அறியக் கூடியதாய் இருந்தது.

எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் கல்லூரியின் வளர்ச்சியிலே தங்கள் சிரமத்தைப் பொருட்படுத்தாது ஈடுபட்டு வந்தார்கள்.

பலகாலமாய் வெளிநாடுகளிலிருந்தாலும் கல்லூரி வளர்ச்சி அடைந்துள்ளமை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றேன்.

125 ஆவது ஆண்டு மலர் வெளிவருவதும் அதில் C.R மாஸ்டர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பெற்ற என் கணவர் செல்லப்பா இரத்தினசபாபதி அவர்களை நினைவில் இருத்தி என்னிடம் செய்தி பெறுவதும் நிறைந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.

கல்லூரி அன்னை தன் பணியை மேலும் மேலும் சமூகத்துக்கு வழங்க ஆண்டவனை இறைஞ்சுகின்றேன்.

© 2008 - 2022 : J/Victoria College, Chulipuram, Sri Lanka


This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.