கல்லூரி வரலாறும் வாழ்வும்
திருமதி இரட்ணலட்சுமி செல்வநாயகம் & திரு சந்திரா சாம்பசிவம்,
நிறுவுநர் வழி
சைவசமயம் உலகமெங்கும் பரந்து விளங்க வேண்டும் என்றால் உலகமெங்கும் சைவசமயத்தவர்கள் இருக்கவேண்டும். உலகம் முழுவதும் சைவர்கள் வாழ வேண்டுமாயின் ஆங்கில அறிவு மிகமிக முக்கியம். ஆகவேதான் ஆங்கிலக் கல்வியையும். சைவசமயத்தையும் வளர்க்கும் ஒரே நோக்கத்திற்காகவே விக்ரோறியா மாதா உதயமானார்.
பேரனார் அமரர் நிச்சிங்கம் கனகரட்ணமுதலியார் 1876 ஆம் ஆண்டில் எங்கள் எட்டுசார் வீட்டில் கல்லூரியை ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து எங்கள் தந்தையார் அமரர் கனகரட்ணமுதலியார் செல்லப்பா நிர்வாகப் பொறுப்பை ஏற்றுத் தற்போது கல்லூரி அமைந்திருக்கும் இடத்திற்குக் கல்லூரியை இடமாற்றம் செய்து, மிகவும் தகுதியான அதிபர். ஆசிரியர்களைச் சேவையில் ஈடுபடுத்தி வந்தார்.
ஆங்கிலேயரான அமரர் வில்லோபி சிமோல் அவர்களை இங்கிலாந்திலிருந்து அழைத்து வந்து அதிபர் ஆக்கினார்.
தொடர்ந்து சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனார் அவர்களை அதிபர் ஆக்கினார்.
பலவழிகளில் வளர்ந்துவரும் காலத்திற் கல்வியின் நிர்வாகப் பொறுப்பைத் தனக்குப் பின் தன் மூத்த மருமகன் மலேசியாவில் இருந்த மு. சிற்றம்பலம் என்பவரிடம் ஒப்படைக்க விரும்பினார்.
அமரர் சிற்றம்பலம் அவர்கள் அந்தநேரம் 2 ஆவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்தபடியால் இங்கு வந்து பொறுப்பை ஏற்க முடியாதநிலை ஏற்பட்டது. தந்தையார் அமரரானார். இந்நிலையில் எமது தாயார் அன்னப்பிள்ளை அவர்களுக்குத் தாங்கமுடியாத சுமை,
முத்த சகோதரர் இரத்னவேல் (Oxford University யில்) டாக்டராகப் படித்து உத்தியோகம் பார்த்தார். ஏனையவர்கள் படித்துக்கொண்டும் இருந்தமையால் கல்லூரி நிர்வாகப் பொறுப்பை எங்கள் உறவினர் அமரர் இராமசாமி தம்பையா அவர்களிடம் ஒப் படைத்தார். அப்போது 2 ஆவது உலக மகாயுத்தம் நடைபெற்றபோதும் அவர் கல்லூரியை மிகவும் திறம்பட நடத்திவந்தார்.
முக்கியமாக நிதிநிலையைச் சமாளிப்பதில் பெரும் இடர்ப்பாடு. கல்லூரியை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியநிலை ஏற்பட்டது.
இது நடைபெற்றது 1946 ஆம் ஆண்டு. அன்று முதல் விக்ரோறியாக் கல்லூரி அரசினர் பாடசாலை என்ற நிலையை எய்தியது. இன்று கல்லூரி வளர்ச்சிப்பாதையிற் சென்று கொண்டிருக்கிறது. கல்லூரி வயது ஒன்றேகால் நூற்றாண்டைக் கடந்துவிட்டது.
தந்தையார் அமரராகி 60 வருடங்களாயினும், அவரின் உருவச்சிலையை அமைத்ததின் பின் எதிர்காலச் சந்ததியினருக்குக் கல்லூரியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
கல்லூரியின் வரலாற்றைத் தாங்கி 125 ஆவது ஆண்டு மலரை வெளியிடவிருக்கும் கல்லூரி அதிபர் திருமதி அ. வேலுப்பிள்ளை அவர்களிற்கும், திரு. க. இந்திரராஜா அவர் களுக்கும், மலர்க் குழுவினர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
கல்லூரி அமைந்ததின் பெருமையையும் பலாபலனையும் 1983 ஆம் ஆண்டின் பின் எங்கள் பிள்ளைகள் உணர்ந்து கொண்டனர். கொழும்பிலிருந்து வந்து யாழ்ப்பாணப் பாடசாலைகளில் படிக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் பீட்டன், பேரனார் வளர்த்த விக்ரோறியாக் கல்லூரி எந்தவித கஷ்டமும் இன்றிக் கல்வி கற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தமை எமக்கு ஏற்பட்ட வரப்பிரசாதமாகும்.
கல்லூரியின் அதிபராகப் பணியாற்றிய திரு. க. அருணாசலம் கல்லூரியின் வர லாற்றுக்கு வடிவம் கொடுத்தார். இன்றைய அதிபர் திருமதி வேலுப்பிள்ளை அதனை அச்சுவாகனம் ஏற்றியுள்ளார். அனைவரும் எம் நன்றிக்கு உரியவர்களே.
This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.