தேவாரம்
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
தேவாரம்
பொன்னு மெய்ப்பொரு ளுந்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை யென்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மைய னென்றறி வொண்ணா
எம்மா னையெளி வந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
யாரூ ரானை மறக்கலு மாமே.
திருவாசகம்
பொன்னிய லுந்திரு மேனிவெண்ணீறு பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர்கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடையார்கள் கருத்து வெளிப்படு மாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுந்திடு மாகாதே
தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடியோம் உடனே உ(ய்)யவந்து தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினிதாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன் என் அத்தன் எழுந்தருளப்பேறிலே.
திருவிசைப்பா
மின்னாருருவம் மேல்விளங்க வெண்கொடிமா ளிகைசூழப்
பொன்னார்குன்றம் ஒன்றுவந்து நின்றது போலுமென்னாத்
தென்னாவென்று வண்டுபாடும் தென்தில்லை யம்பலத்துள்
என்னாரமுதை எங்கள்கோவை என்றுகொல் எய்துவதே.
திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை! வளர்கநம் பக்தர்கள்! வஞ்சகர் போய் அகல!
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
புராணம்
பொன்றிரளு மணித்திரளும் பொருகரிவெண் கோடுகளும்
மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரு நறுங்குறடும்
வன்றிரைக ளாற்கொணர்ந்து திருவதிகை வழிபடலாற்
றென்றிசையிற் கங்கையெனுந் திருக்கெடிலந் திளைத்தாடி.
This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.