ஆசிச் செய்தி
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள்,
2 ஆவது குருமஹா சந்திதானம்,
நல்லூார், யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி தனது 125 ஆவது ஆண்டை நிறைவு செய்வதையிட்டு மனநிறைவடைகின்றோம்.
பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கல்லூரி இந்நாட்டுக்குக் கல்வியிலும் ஏனைய துறைகளிலும் சீரான பணியைச் செய்தமை எல்லோருடைய மனதிலும் நீங்காத இடத்தைப்பெற்றுள்ளது.
கல்வியே மனிதனை மனிதனாக்குகின்றது. அதனாலேயே இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பர். வள்ளுவரும் “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்றார்.
இதனையே அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு பாடசாலைகளும் கல்விக்கு அயராது உழைத்து வருகின்றன. 125 ஆண்டுகள் இக்கல்லூரியின் வளர்ச்சிக்கென தொண்டு செய்த அதிபர், ஆசிரியர், பழைய மாணவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
கல்லூரி தொடர்ந்தும் கல்விக்கும் ஏனைய துறைகளுக்கும் தொண்டாற்ற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
‘என்றும் வேண்டும் இன்ப அன்பு'
This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.